SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு ஊழியர், ஆசிரியர்கள் மறியல் 850 பெண்கள் உள்பட 1400 பேர் கைது

9/13/2017 10:24:02 AM

திருச்சி:  திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் 850 பெண்கள் உள்பட 1400 பேர் கைது செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6வது நாளான நேற்று திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் திரண்டு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து ேபரணியாக வந்து கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன், கென்னடி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம், ஊரக வளர்ச்சி துறை, ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டு கோரிக்ைககளை வலியுறுத்தினர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 850 பெண்கள் உள்பட 1400 பேரை கைது செய்து அரசு பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களில் ஏற்றி சென்று அப்பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் அடைத்தனர். ஸ்டிரைக் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் வெறிச்சோடியதால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான துவக்கப்பள்ளிகள் இயங்கவில்லை. நடுநிலை பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்ததால் பள்ளிகள் செயல்பட்டன. பகுதி நேர ஆசிரியர்கள் மற்ற ஊழியர்களை வைத்து பள்ளி இயங்கியது. இதேபோல் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி முன் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் (ஆக்டா) ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொருளாளர் சூசை உள்பட ஏராளமான பேராசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்