SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூலாம்பட்டியில் நீர்வரத்து அதிகரிப்பால் பெரிய விசைப்படகு இயக்கம் மக்கள் மகிழ்ச்சி

9/13/2017 10:20:01 AM

இடைப்பாடி: இடைப்பாடி அருகே காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பூலாம்பட்டியிலிருந்து பெரிய விசைப்படகு இயக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் காவிரி நீர், இடைப்பாடி அருகே செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை ஆகிய பகுதியில் உள்ள நீர்மின் கதவணை வழியாக பவானி, திருச்சி, தஞ்சாவூருக்கு செல்கிறது.

அத்துடன் பூலாம்பட்டி, நெரிஞ்சிபேட்டை கதவணையில், தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்பதால், மின்சார உற்பத்தியும் நடந்து வருகிறது. இந்நிலையில், இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், பூலாம்பட்டி காவிரியாற்றுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனிடையே, பூலாம்பட்டியிலிருந்து நெரிஞ்சிப்பேட்டைக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சிறிய விசைப்படகு இயக்கப்பட்டு வந்தது.

நேற்று முதல் பெரிய விசைப்படகும் இயக்கப்பட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள், பெரிய விசைப்படகில் ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிபேட்டைக்கு சென்றனர். அத்துடன் இயற்கை சூழ்ந்த பாலமரை அழகை ரசித்து செல்கின்றனர். அதே நேரத்தில், காவிரி கரையோரத்தில் உழவு பணியிலும், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். களை எடுத்தல், விதை விதைத்தல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்