SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகாரிகள் குளறுபடியால் நடிகை காஜல் அகர்வாலுக்கு காமலாபுரத்தில் ஸ்மார்ட் கார்டு பொதுமக்கள் அதிர்ச்சி

9/13/2017 10:19:46 AM

ஓமலூர்: ஓமலூர் அருகேயுள்ள ரேஷன் கடையில் விநியோகிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பேப்பருடன் கூடிய ரேஷன் கார்டுக்கு பதில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் சென்னையில் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு படிப்படியாக அனுப்பப்பட்டு வருகிறது.

அவ்வாறு விநியோகிக்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட் கார்டுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. குறிப்பாக குடும்பத்தலைவர், புகைப்படங்கள் மாறி வருவதாகவும், பெயர் மற்றும் முகவரியில் குளறுபடிகள் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமம், ஆர்சி செட்டிப்பட்டி கோமாளிவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில், 300க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர். இதில் 70 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விட்டது.

இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி சரோஜாவுக்கு நேற்று முன்தினம் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. அதில் குடும்பத்தலைவர் விவரம் குறிக்கும் இடத்தில், சரோஜாவின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ரேஷன் கடை ஊழியர்களிடம் முறையிட்ட போது, அவர்கள் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் புகைப்படம் கொடுத்து, மாற்றிக்கொள்ளலாம் என்றும், அதுவரை பொருட்கள் வழங்குவதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்