SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிரை பறித்த செல்போன் பேச்சு மரத்தில் பைக் மோதி புதுமாப்பிள்ளை பலி வீரகனூர் அருகே சோகம்

9/13/2017 10:19:30 AM

கெங்கவல்லி: வீரகனூர் அருகே அதிவேகமாக சென்ற பைக் சாலையோர மரத்தின் மீது மோதியதில், புதுமாப்பிள்ளை பலியானார். பெரம்பலூர் மாவட்டம் சவாலிகொண்டபுரம் பகுதியை சேர்ந்த மாதையன் மகன் செந்தில்குமார்(29). ஐடி படித்துள்ள இவர், துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், விருத்தாச்சலம் அருகேயுள்ள பெண்ணாடம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு, 15ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையொட்டி, செந்தில்குமார் கடந்த 3 மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்று மதியம், வீரகனூரில் உள்ள உறவினர் மற்றும் நண்பர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து விட்டு, பைக்கில் அதிவேகமாக சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். வீரகனூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, செல்போனில் பேசியபடி வண்டியை ஒட்டியுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திருப்பியபோது, நிலைதடுமாறிய பைக் சாலையோர மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர், மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆத்தூர் மற்றும் பெரம்பலூர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஒன்றேகால் மணி நேரத்துக்கு பிறகு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் அவரை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்