SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரத்து குறைவால் விலை குறையாத சின்னவெங்காயம்

9/11/2017 10:47:07 AM

மதுரை: சின்னவெங்காயம் சாகுபடி குறைவாக உள்ளதால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக விலை குறையாமல் கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல், தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. காய் நடவு, நாற்று நடவு என இரு முறைகளில் சின்ன வெங்காயம் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுகிறது.

இந்த வருடம் கடுமையான வறட்சி காரணமாக சாகுபடி பரப்பளவை விவசாயிகள் குறைத்தனர். கிணற்று பாசனம் உள்ளிட்டவற்றை வைத்து சிலர் மட்டும் குறைந்தளவு சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் மற்றும் கீழமாரட் வீதி வெங்காய மார்க்கெட்டிற்கு தினமும் 1000 மூடைகள் வரும் இடத்தில் 300க்கும் குறைவான மூடைகள் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்ட்ரல் மார்க்கெட் சங்க தலைவர் முருகன் கூறும்போது, ‘மதுரை மார்க்கெட்டிற்கு வரும் சின்னவெங்காயம் வரத்து தொடர்ந்து குறைந்தே வருகிறது. இந்நிலையில், தொடர் விசேஷ தினங்கள் வருவதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.தற்போது, தென்மாவட்ட பகுதிகளில் ஓரளவு மழை பெய்துள்ள நிலையில், விவசாயிகள் வெங்காய சாகுபடி பரப்பளவை அதிகரித்துள்ளனர். இதனால், அடுத்த மாதத்தில் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் பல்லாரி கிலோ ரூ.18க்கு குறைந்தே விற்பனையாவதால், ஓட்டல்கள் மற்றும் விசேஷ தினங்களுக்கு மூடை, மூடையாக வாங்கி செல்கின்றனர்’என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்