SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கியது அரசு ஊழியர், ஆசிரியர் சாலை மறியல்

9/9/2017 11:59:53 AM

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று துவங்கியது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.  அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து 7 வது ஊதியகுழுவை அமல்படுத்த வேண்டும். அதுவரை 2016ம் ஆண்டு ஜனவரி முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ரத்து செய்துவிட்டு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட 7 வட்டாரங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்,  ஓய்வூதியதாரர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் குவிந்தனர்.

ஜாக்டோ-ஜியோ மாவட்ட தொடர்பாளர் ராஜசேகரன் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராட்டம் நீடித்ததால், வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. இதனால் டவுன்ஹால், அவினாசி சாலை, திருச்சி சாலை, குட்ஷெட் ரோடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டது. கோவை மாநகர துணை கமிஷனர் லட்சுமி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.  பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ‘வெறிச்’:  தொடர் போராட்டம் காரணமாக நேற்று முன்தினமே பள்ளி சாவிகளை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். நேற்று சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால், தனியார் பள்ளி ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், பயிற்சி பள்ளி மாணவர்கள், பகுதிநேர பயிற்றுநர்கள், எஸ்எஸ்ஏ அலுவலர்கள் உதவியுடன் பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் வகுப்புகள் முற்றிலுமாக நடக்கவில்லை.

உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் வகுப்புகள் நடைபெற்றன. கிராமப்புற பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கொண்டு பள்ளிகள் கவனிக்கப்பட்டன.  இதேபோல, டிஇஇஓ, டிஇஓ, எஸ்எஸ்ஏ, ஐஎம்எஸ், சிஇஓ உள்ளிட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால், நிர்வாகப்பணி பெருமளவில் பாதிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியின் உத்தரவின்பேரில், போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. இதேபோன்று கோவை கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக ஊழியர்கள் 70 சதவீதம் பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால்  அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.நேற்று முன்தினம் அரசு தரப்புடன் ஜாக்டே ஜியோ சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அரசு தரப்பில் கோரிக்கை பரிசீலிப்பதாகவும், இதற்கு அவகாசமும் கேட்டனர். அப்போது சில சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தனர். அதன்படி போராட்டத்தில் பங்கேற்காது என அறிவித்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி தெரிவித்தது. இதனையும் மீறி கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பெரும்பாலனோர் போராட்டத்தில் கலந்துகொண்டு
தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HarrY_MeghanMarkel

  கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

 • Yelagirisummerceremony

  ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

 • kodai_flower

  கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

 • subwaymodi

  சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

 • 20-05-2018

  20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்