SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட்தேர்வுக்கு விலக்கு கோரி மாணவர் சங்கத்தினர் சாலை மறியல்

9/9/2017 11:59:35 AM

கோவை: நீட் தேர்வுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போராடி வந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1ம் தேதி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும், இந்திய மாணவர் சங்கத்தினர், கோவை பீளமேடு, ஹோப் காலேஜ் சிக்னல் அருகே நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தினேஷ், செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர்களின் இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 35 பேரை கைது செய்தனர். இவர்களை தனியார் மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்