SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனிதா இறப்புக்கு நியாயம் கேட்டு வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்

9/9/2017 11:59:23 AM

கோவை: கல்வியை மாநில பட்டியலில் இணைக்க வேண்டும், நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதாவின் இறப்புக்கு நியாயம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோவை வழக்கறிஞர்கள் கடந்த 5ம் தேதி முதல் கோர்ட் புறக்கணிப்பு, சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, 3ம் நாளான நேற்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவுவாயில் முன்பு 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரையிலும் ரோட்டோரமாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் தொடர்ந்து 3 நாட்களாக கோர்ட் பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் உள்ளதால், கோவை கோர்ட்களில் வழக்கு விசாரணை முடங்கியுள்ளது. அடுத்த கட்டமாக ேகாவை ரயில் நிலையத்தில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்