SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடின்னாலே தனி கவனிப்புதான்...!

8/12/2017 11:23:23 AM

ஆடி மாதத்தை வைத்து ஏற்படுத்தும் பரபரப்புகளுக்கு அளவே இல்லை. விடிய விடிய மட்டன் ஸ்டாலில் காத்திருந்து கறி எடுத்து வந்து சாப்பிட்டு ஆடியை கொண்டாடுவார்கள். புது மாப்பிள்ளைகளுக்கு ஆடின்னாலே மாமியார் வீட்டில் தனி கவனிப்புதான். தலை தீபாவளி போல், தலை ஆடியும் உற்சாகமான பண்டிகைதான்.
ஆனால், விருந்துக்கு வந்து விட்டு, மனைவியை மாமியார் வீட்டில் விட்டு விட்டு போக வேண்டுமே என்பதுதான் கவலை. ஆடி மாதம் கோவில்களில் திருவிழாதான். கூழ் ஊற்றுவது தொடங்கி, தீ மிதிப்பது வரை களை கட்டும். கடை வீதிகளில் ஆடி தள்ளுபடி பர்சேஸ் செய்ய அலைமோதும். இந்த ஆண்டு, ஆடி மாதத்தை வைத்து டுவிட்டரில் பதிவுகள் அள்ளுகின்றன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் என்றால் அது ஷாப்பிங் சீசன் என்பது போல் அதிரடி தள்ளுபடிகளுடன் களை கட்டும். ஆடி மாதத்தை ஆங்கில மாதத்தில் சொல்ல வேண்டும் என்றால் ஜூலையில் 15 நாள், ஆகஸ்ட்டில் 15 நாள் வரும்.  ஆனால், இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால், ஆடி மாத தள்ளுபடிகளை முன்கூட்டியே அறிவித்துவிட்டனர் சிறு வணிகர்கள். ஜவுளி, மேஜை, நாற்காலி, கார், பைக் என பல வகையான பொருட்களை, ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே விற்பனை செய்துவிட்டனர். சில கடைகளில் 50% அளவுக்குகூட தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

துணி விற்பனையில் ஜிஎஸ்டி என்ன செய்யும் என்று பார்த்தால், ஒரு துணியின் 60% விலைக்கு 12% வரி விதிக்கப்படும். எனவே, ஒரு துணியின் அதிகபட்ச விலையிலேயே (எம்ஆர்பி) வரியும் அடங்கிவிடும். இதனால், சில்லரை விற்பனையாளர் எந்த வரியும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு ஆலையில் இருந்து வெளியேறும் ஒரு துணியின் மதிப்புக்கு வரி மதிப்பிடப்படும். அதாவது, ₹1000க்கு மேல் இருக்கும் ஒரு துணிக்கு 12% வரியும், ஆயிரத்துக்கு குறைவாக இருக்கும் துணிக்கு 5% வரியும் விதிக்கப்படும். இதனால் தற்போது கிடப்பில் இருக்கும் பொருட்களை ஜூலை 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்தால், ஜிஎஸ்டி வரியை தனியாக வசூலிக்க வேண்டியதிருக்கும். எனவே, தங்களிடம் இருக்கும் இருப்புகளை காலி செய்யவே சில்லரை விற்பனையாளர்கள் விரும்பினர். இதன் தொடர்ச்சியாக, முன்கூட்டியே தள்ளுபடி போட்டு தள்ளிவிட்டனர்.செல்போன் விற்பனையாளர்கள் கூறுகையில், ‘’ஜிஎஸ்டி பற்றி பலருக்கு புரியவில்லை. இந்த நிலையில் எப்படி செல்போன் வாங்குவார்கள். அதனால்தான் சலுகை அறிவித்தோம். இந்திய சந்தையில் ஜிஎஸ்டியால் ஒரு பொருளின் விலை ஏறுகிறது, இன்னொன்று குறைகிறது என்று பலவாறான கருத்து உள்ளது. அதே சமயம், ஜிஎஸ்டி வணிகர்களுக்கு நல்லதாகவும் இருக்கலாம், மோசமானதாகவும் இருக்கலாம். நல்ல தெளிவு வரட்டும், அதுவரை காத்திருக்க வேண்டியதில்லை. எனவே, இந்த வருடம், ஜூலைக்கு முன்பு பழைய ஸ்டாக்குகளை தள்ளிவிடவே, ஆடி தள்ளுபடி அறிவிப்பு முன்பே வெளியாகிவிட்டது’’ என்றனர்.

இதோ சில டிப்ஸ்

* உங்களுக்கு எப்போது வசதியாக இருக்குமோ அப்போது ஷாப்பிங் செல்வதற்கு திட்டமிடுங்கள்.
* குடும்பத்தினருடன் செல்ல விரும்பினால், அனைவரும் வீட்டில் இருக்கும் நாளாக பார்த்து கடைக்கு செல்லும் வகையில் தயார் படுத்திக்கொள்ளவேண்டும்.
* என்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டால் கடைக்கு சென்ற பின்னர் தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கலாம்.
* அவசரஅவசரமாக ஷாப்பிங் செய்வதை தவிருங்கள். நிதானமாக, பொறுமையுடன் பர்சேஸ் செய்தால் மட்டுமே திருப்திதருவதாக அமையும்.
* வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக பணம், கிரடிட் கார்டு உள்ளிட்டவற்றை எடுத்து செல்கிறீர்களா என்பதை சரிபார்த்துகொள்ளுங்கள்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • polis_petrol11

  போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

 • poepl_chennaii11

  சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

 • thoothukudi_polissaa

  தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

 • duchess_meganmarkel

  திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

 • hyderabad_bustop11

  ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்