SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படிக்கட்டு பயணத்தால் விபரீதம் மாநகர பஸ் சுவரில் உரசியதில் பிளஸ் 2 மாணவன் பரிதாப பலி 2 பேர் படுகாயம்

8/12/2017 11:22:52 AM

சென்னை: சென்னை அடுத்த நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சுபாஷ் (17). நெற்குன்றம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (17), எம்எம்டிஏ காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜீவா (17). மூவரும் நண்பர்கள், இவர்கள், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர். பள்ளி செல்வதற்காக சென்னை திருவேற்காட்டில் இருந்து தி.நகர் செல்லும் (த. எ 27 சி) மாநகர பஸ்சில் சென்றனர். இவர்கள் பஸ் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளனர். காலை 9.30 மணி அளவில் ஆற்காடு ரோடு, தெற்கு சிவன் கோயில் தெரு வழியாக மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்த தனியார் மருத்துவமனையின் சுவர் மீது பஸ் சற்று வேகமாக உரசியது.

இதில், பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த சுபாஷ், கார்த்திக், ஜீவா ஆகிய மூன்று  மாணவர்களும் கீழே விழுந்தனர். இதில் மாணவன் சுபாஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கார்த்திக் மற்றும் ஜீவா ஆகியோருக்கு கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. உடனே 3 பேரையும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுபாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விழுப்புரம் மாவட்டத்ைத சேர்ந்த மாநகர பஸ் டிரைவர் பார்த்திபன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2017

    21-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்