SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாப்பிட்டவுடன் டீ, காபி குடிக்கக் கூடாது.... ஏன்..?

8/12/2017 10:47:28 AM

உணவு பண்டங்களில் இரும்புச்சத்து: அதிரசத்தை கேழ்வரகு மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கலாம். இதன் மூலம் எளியமுறையில் இரும்புச்சத்தை பெறலாம். இதேபோல் வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலையுடன் எள்ளு மற்றும் வெல்லம் சேர்த்து தயாரித்த உருண்டை. கேழ்வரகு, முருங்கைக்கீரை மற்றும் வெல்லம் சேர்த்து தயாரித்தஅடை, கைக்குத்தல் அவலில் தயாரித்த உணவுப்பண்டங்கள், புதினா மற்றும் கருவேப்பிலை துவையல் போன்ற பண்டங்களில் இரும்புச்சத்து அதிகம் இருக்கும்.இரும்புச்சத்தை உட்கிரகிக்க ஊக்குவிக்கும் பொருட்கள்: உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்து உடலில் உட்கிரகிக்கப்பட வைட்டமின் சி சத்து தேவைப்படுகிறது.
இதற்காக இச்சத்து நிறைந்துள்ள நெல்லிக்காய், எலுமிச்சைசாறு, முளைகட்டிய பயறு வகைகள், பச்சை மிளகாய் மற்றும் கொடை மிளகாய், பச்சைக்காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் போன்றவற்றை அதிகம் உண்ணலாம்.

உணவு உண்ணும்முன் உணவில் அரை எலுமிச்சம்பழத்தின் சாற்றை பிழிந்து உண்ணுவதால் வைட்டமின் சி போதுமான அளவு கிடைக்கும். உட்கிரகிப்பதை தடை செய்யும் உணவு பொருட்கள்: சில பொருட்கள் உணவில் உள்ள இரும்புச்சத்தை உட்கிரகிக்கப்படுவதை தடுக்கின்றன. இதனால் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டாலும் பயனில்லாமல் போகிறது. டீ, காபி போன்ற பானங்களிலும், அரிசி போன்ற தானியங்களிலும் இந்நிலை அதிகம் உள்ளது. எனவே உணவு அருந்திய உடன் அல்லது ஒரு மணி நேரத்திற்குள் டீ, காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.மூன்று வேளையும் அரிசி உணவை உண்ணாமல் கேழ்வரகு, கம்பு, கோதுமை போன்ற மற்ற தானியங்களை முளைகட்டி உண்பது நல்லது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்