SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளைஞர் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

8/12/2017 10:47:12 AM

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குழுக்கள் அமைக்கலாம்.நிபந்தனைகள்: 18 முதல் 60 வயதுடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை, கிராமப்புறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்ட அடையாள அட்டை நகலை இணைக்கலாம். தொடர்பு முகவரி: சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), திட்ட அலுவலர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு நேரிலோ (0451) 2460050 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

* நகர்ப்புற குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்படுகிறது. நிபந்தனைகள்: குழு அமைத்து 6 மாத காலம் முடிவு அடைந்து தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நகர்ப்புறத்தை சேர்ந்த பெண்களாக இருக்க வேண்டும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள்: தரமதிப்பீடு படிவம், வங்கியாளர் ஒப்புதல் படிவம் 3, குழு போட்டோ மற்றும் தீர்மான நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
* 18 முதல் 35 வயதுடைய இருபாலருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியும், பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
* நகர்ப்புறங்களில் அண்டை வீட்டு கூட்டமைப்பு ஏற்படுத்தலாம். இதற்காக ஒரே பகுதியில் குறைந்தபட்சம் 6 மாதம் முடிவடைந்த 10 சுயஉதவிக்குழுக்கள் தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்: சுயஉதவிக்குழு பற்றிய விபரம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் வறுமைக்கோட்டு பட்டியல் எண் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2018

    23-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்