SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை நகர், புறநகரில் நர்ஸ் உட்பட 3 பேரிடம் 15 பவுன் நகை பறிப்பு

8/12/2017 10:47:01 AM

மதுரை:மதுரை நகர், புறநகர் பகுதியில் நர்ஸ் உட்பட 3 பேரிடம் 15 பவுன் நகையை வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்தையா. இவரது மனைவி சீதாம்மாள். இவர் திண்டுக்கல் சாலை சி.ஏ.எஸ் காலனி அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த 2 பேர் சீதாம்மாள் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து அவர் செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் கம்பூர் அருகேயுள்ள சின்ன கற்பூரம்பட்டியைச் சேர்ந்த அழகன். இவரது மகள் அழகம்மாள்(46). இவர் மணல்மேட்டுபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். டூவீலரில் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.

திருச்சி - மதுரை சாலை கொட்டாம்பட்டி அய்யாப்பட்டி பிரிவு அருகே வரும் போது, பின்னால் டூவீலரில் வந்த 2 பேர் அழகம்மாள் வந்த டூவீலரை இடித்து கீழே தள்ளி விட்டு கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து கொாண்டு தப்பினர். இதுகுறித்து அவர் கொட்டாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர். அலங்காநல்லூர் அருகேயுள்ள சிறுவாலை பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள் சென்பகதேவி (27). இவர் கூடல்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். டூவீலரில் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார். தினமணி நகர் அருகே வரும் போது, பின்னால் டூவீலரில் வந்த 2 பேர் சென்பகதேவி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து அவர் அலங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதியத்தை குறிவைத்து நடக்கும் நகை பறிப்பு

நகரில் மதிய நேரத்தில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நேரம் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஓய்வு எடுக்க 1 மணிக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு திரும்புகின்றனர். அந்த இடைவேளையில் தான் நகை பறிப்பு சம்பவங்கள் நடக்கிறது. இதனால் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் மதியம் 3.30 மணிக்கே மீண்டும் பணிக்கு வர துணை கமிஷனர் சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.




திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-12-2017

    17-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்