SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

8/12/2017 10:35:49 AM

திருச்சி:  ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆடிமாத வெள்ளிகிழமை அம்மனை வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம். அம்மன் குளிர்ந்த மனத்தோடு கேட்கும் வரங்களை பக்தர்களுக்கு கொடுப்பாள் என்பது நம்பிக்கை. நேற்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மம் கோயிலில் நேற்றுமுன்தினம் முதலே பக்தர்கள் குவிந்தனர். பலரும் விரதம் இருந்து பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். நேற்று மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு தரிசன வரிசைகளும் அமைக்கப்பட்டிருந்தன. திருவானைக்காவல் கோயில்: திருவானைக்காவல் கோயிலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்தனர்.

நேற்று அகிலாண்டேஸ்வரி அம்மன் தாழம்பூ பாவாடை, மலர்க்கிரீடம், காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்கரம் பொறிக்கப்பட்ட தாடங்கங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று அதிகாலை 3 மணிக்கே நடை திறந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். கட்டணம் மற்றும் இலவச தரிசனத்திலும் பக்தர்கள் தனித்தனியாக வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வெக்காளியம்மன்: உறையூர் வெக்காளியம்மன் கோயில் உள்பட அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் குவிந்தனர். கோயில்களில் போலீசார் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2017

    21-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்