SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பகலிலும், இரவிலும் துறையூர் பகுதியில் தொடர் மின்வெட்டு

8/12/2017 10:35:40 AM

துறையூர்:  துறையூர் பகுதியில் கடந்த 5 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் பகலிலும், இரவிலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.துறையூர் பகுதியில் கடந்த 5 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. பகளவாடி, கரட்டாம்பட்டி, மண்பறை, கீரம்பூலி உள்ளிட்ட பகுதிகளில் பகலில் பல மணி நேரமும், இரவு நேரத்தில் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை 1 மணிநேரமும் மின்வெட்ட அமல்படுத்தப்படு கிறது. இதுபற்றி மின்வாரிய அலுவலகத்தில் கேட்டபோது, 11 கேவி பகுதிகளுக்கு தொடர் மின்சாரமும்,  22 கேவி மின் இணை பகுதிகளுக்கு 1மணி நேரத்திற்கு ஒருமுறை மின்வெட்டும் நடை முறைபடுத்தப்படுகிறது.

மேலும் மின்உற்பத்தி குறைவாக உள்ளதால் மின்வெட்டு நடைபெறுகிறது. இதுகுறித்து தகவல் வேண்டுமானால் மின்வாரிய வெப்சைடில் பார்த்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டால் இரவு நேரங்களில் ஊராட்சிகளின் குடிநீர் மோட்டார்கள் பழுதாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் இரவு முழுவதும் டேங்க் ஆபரேட்டர்கள் கண்விழித்து எப்போது தடைபட்ட மின்சாரம் மீண்டும் வருகிறதோ, அதுவரை காத்திருந்து தண்ணீர் மோட்டாரை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டள்ளதாக வருத்தம் தெரிவித்தனர். இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் துறையூர் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்