SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவிகள் சாவில் துப்புதுலக்க மப்டி போலீசார் வீடு, வீடாக விசாரணை

8/12/2017 10:35:31 AM

மணப்பாறை:  மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்த வைரம்பட்டியைச் சேர்ந்த செல்வி, சரளப்பட்டியைச் சேர்ந்த ரதிதேவி ஆகியோர் கடந்த 3ம்தேதி தட்டாரப்பட்டி ரயில்வே தண்டவாளம் அருகில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தனர்.
ரயில்வே எஸ்பி ஆனி விஜயா சடலங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஒரு மாணவியின் பேக்கில் இருந்த கடிதத்தில், 3 மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள்தான் எங்கள் சாவுக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது. பிளஸ் 2 படிக்கும் அந்த 3 மாணவர்களையும் கைது செய்த போலீசார், காவல்நிலையத்தில் சரணடைந்த தலைமை ஆசிரியர் தங்கவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பள்ளியில் ஆய்வு நடத்திய மாவட்டகல்வி அதிகாரி போலீசார் விசாரணை அறிக்கை வந்த பின்னர் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ரயில்வே தனிப்படை டிஎஸ்பி பன்னீர்செல்வம் கூறுகையில், மாணவிகள் சாவு தொடர்பான விசாரணைக்கு பெற்றோர், சக மாணவ, மாணவிகள் ஒத்துழைப்பு இல்லை. இதனால் இதுவரை துப்பு துலங்கவில்லை என்றனர். மேலும் தனிப்படை போலீசார் மப்டி உடையில் சரளப்பட்டி கிராமத்துக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவாரத்துக்குள் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்றனர். மாணவிகள் சாவுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைதுசெய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய செயலாளர் சண்முகானந்தம் தலைமையில் வையம்பட்டி பஸ்நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BigbEN4anduER

  பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

 • stuNNNINsatelliIMAG

  சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

 • sOlarapoERALAMP

  தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

 • Singaporecollision

  சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

 • 378chennaiDAY

  ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்