SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடித்திருவிழாவையொட்டி அம்மாப்பேட்டையில் வண்டிவேடிக்கை கோலாகலம்

8/12/2017 10:25:02 AM

சேலம்: ஆடித்திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டையில் நேற்றிரவு வண்டிவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் உள்ள அம்மன் கோயில்களில், ஆடித்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று அம்மப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலில், புகழ்பெற்ற வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தெய்வங்களின் வேடம் அணிந்து, ஊர்வலமாக வந்தது, பொதுமக்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.
அம்மாப்பேட்டை சிவசக்தி நண்பர்கள் குழு சார்பில் 5 பிரமாண்ட வண்டிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வண்டிவேடிக்கையில், பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்தி அவதாரங்கள், வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியர் வீரபாகுவுடன் வந்து காட்சியளித்தல், லட்சுமி, நரசிம்மர், நாரதர், பிரகலாதனுடன் எழுந்தருளுதல், திருப்பதி வெங்கடாசலபதி, அனுமன் மற்றும் பாதுகாவலர்களுடன் காட்சியளித்தல், பச்சக்காளி, பவளக்காளி மற்றும் நீலக்காளி ஆகியோர் வதம் செய்தல் போன்ற காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.குறிப்பாக, விநாயகர், முருகனுடன் 15 அடி கொண்ட சிவன், பார்வதி ஆகியோரின்  அனிமேசன் காட்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும், கோவிந்தன் தெரு சார்பில் முருகன், பிடாரி அம்மன் கோயில் தெரு சார்பில் சிவன், மார்கத்தெரு சார்பில் அனுமருடன் ராமர், ராஜகணபதி தெரு சார்பில் எமதர்மன் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண குவிந்தனர்.பராசக்தி வண்டிவேடிக்கை குழு சார்பில் சிறப்பான வண்டிகளுக்கு பரிசு வழங் கப்பட்டது.  இதேபோல், ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. குறிப்பாக, பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-லட்சுமி, பார்வதி வேடமணிந்து பக்தர்கள் உலா வந்தது, அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

சிலிர்க்க வைத்த சாகச நிகழ்ச்சிகள்

ஆடித்திருவிழாவினையொட்டி, அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தில் செங்குந்தர் உடற்பயிற்சி சங்கத்தின் சார்பில் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. உடற்பயிற்சி சங்கத்தை சார்ந்தவர்கள், சிலம்பாட்டம், சர்க்கஸ் விளையாட்டு மற்றும் நெருப்பு வளையத்தில் பாய்தல் ஆகியவறை மேற்கொண்டனர். குறிப்பாக வைரவேல், ராஜா ஆகியோர் மார்பின் மீது கல் வைத்து சம்பட்டியால் உடைத்ததும், வேல்முருகன் என்பவரது மார்பின் மீது உரல் வைத்து மாவு இடித்ததும், பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 13-12-2017

  13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • Christmasstarlights

  கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் ஸ்டார் விளக்குகள் விற்பனை ஜோர்

 • RAJINI_FANS

  நடிகர் ரஜினிகாந்தின் 67வது பிறந்தநாள்: அவரை காண வந்த ரசிகர்களை அனுமதிக்காத போலீசார்!

 • seaplaneModi

  குஜராத்தில் முதன்முறையாக நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம்

 • Chennai_ThickFog

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்த கடும் பனி மூட்டம்: விமானங்கள் ரத்து, வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்