SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி

8/12/2017 10:24:42 AM

வாழப்பாடி:  வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி காளிசெட்டியூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவரது மனைவி பிரேமா. இவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு, கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை அனுமதித்து, சிகிச்சை மேற்கொண்டனர். ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மக்கள், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், இப்பகுதிகளில் மருத்துவ குழு முகாமிட்டு, சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், பேரூராட்சி நிர்வாகம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்