SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் பஸ்சை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

8/12/2017 10:24:32 AM

வாழப்பாடி: வாழப்பாடி அருகே கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணை பாதி வழியில் கீழே இறக்கிவிட்ட  தனியார் பஸ்சை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தினர். வாழப்பாடி அருகே மன்னாய்க்கன்பட்டி பிரிவை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் சதீஷ். இவரது மனைவி சங்கீதா(25). இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றிருந்த சங்கீதா, நேற்று காலை சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தார். அங்கிருந்து சொந்த ஊர் செல்வதற்காக, தனியார் பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்டு சுமார் முக்கால் கிலோ மீட்டர் சென்றதும், மன்னாய்க்கன்பட்டி பிரிவுக்கு பஸ் செல்லாது என கூறிய கண்டக்டர், சங்கீதாவை கீழே இறக்கி விட்டுள்ளார். குழந்தை மற்றும் 2 பேக்குகளுடன் நடுவழியில் இறக்கி விட்டதால் கடும் அவதியடைந்த சங்கீதா, அங்கிருந்து ஆட்டோ பிடித்து மீண்டும் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றார். அங்கு வேறொரு பஸ் பிடித்து ஊருக்கு சென்ற அவர், நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை மன்னாய்க்கன்பட்டி பிரிவு சாலை அருகே திரண்டனர். அப்போது சங்கீதாவை கீழே இறக்கி விட்டு சென்ற தனியார் பஸ் அவ்வழியாக வந்தது. அந்த பஸ்சை சிறைபிடித்த மக்கள், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பஸ்சை, தொடர்ந்து மன்னாய்க்கன்பட்டி பிரிவு சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2018

    23-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்