SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமகிரிப்பேட்டையில் கனமழை சின்னகாக்காவேரி ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது

8/11/2017 10:43:23 AM

நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், சின்ன  காக்காவேரி ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் இரவு முழுவதும்  சிரமப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி  பேரூராட்சி 2வது வார்டில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 140  ஏக்கர் பரப்பளவில் சின்னகாக்காவேரி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு  போதமலை, போரையாறு பகுதியில் இரு்ந்து கால்வாய் வழியே தண்ணீர் வருகிறது.  

சின்னகாக்காவேரி ஏரியின் உபரிநீர் ராசிபுரம், கோனேரிப்பட்டியில் உள்ள  ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. நாமகிரிப்பேட்டை அருகே சீராப்பள்ளி  பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இரவு 9  மணி வரை நீடித்த கனமழையால், சின்னகாக்காவேரி ஏரியில் தண்ணீர் அதிகளவு நிரம்பியது.

ஏரி முழுவதும் மழைநீர் நிரம்பியதால், தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் 2வது வார்டில் உள்ள 250 வீடுகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் முழங்கால் அளவு தண்ணீர் புகுந்தது. வீட்டிற்குள்  தண்ணீர் புகுந்ததால் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் அடித்து  செல்லப்பட்டன. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதியடைந்தனர்.

தொடர்ந்து மழை நின்றதும் இரவு 10 மணிக்கு ஊருக்குள் புகுந்த  நீரை, அப்பகுதி மக்கள் கால்வாய் வெட்டி ராசிபுரம் கோனேரிப்பட்டியில் உள்ள ஏரிக்கு திருப்பிவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், போரையாற்றில் இருந்து சின்னகாக்காவேரி செல்லும் கால்வாய்யில் அதிகளவு செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன.

மேலும் சின்னகாக்காவேரி ஏரியிலும் கருவேலம் மரங்கள் அதிகமாக உள்ளன. ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் தான், ஏரியில் மழைநீர் தேங்க முடியாமல் ஊருக்குள் வந்துள்ளது. கனமழை பெய்யும்  நேரங்களில் ஏரியில் அதிகளவு நீர் தேங்கி ஊருக்குள் வருவதால் ஏரியை தூர்வார  வேண்டும் என ஏற்கனவே புகார் மனு அளித்திருந்தோம். ஆனால் அதிகாரிகள் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மீண்டும் இதுபோன்ற பாதிப்பு  ஏற்படாமல் இருக்க ஏரி, குளங்களை தூர்வாரி, தடுப்புகளை அமைக்க வேண்டும்.  நேற்று ஊருக்குள் தண்ணீர் வந்ததால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை  அனைவரும் தூக்கமின்றி தவித்தோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஊர்மக்கள் திரண்டு போராட்டத்தில்  ஈடுபடுவோம் எனவும் கூறினர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்