SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2வது நாளாக கடும் மழை மாவட்டத்தில் 108 மிமீ பதிவு

8/11/2017 10:43:14 AM

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2வது நாளாக கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவி வருகிறது.

மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை 77 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினமும் மாவட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. தொடர் மழையால் வறண்டு கிடந்த விவசாய நிலங்கள், ஏரி, குளங்கள், கிணறுகள் என அனைத்திலும் தண்ணீர் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லிமீட்டரில்): நாமக்கல் 5, ராசிபுரம் 48, சேந்தமங்கலம் 6, திருச்செங்கோடு 3, எருமப்பட்டி 3, மங்களபுரம் 28, புதுச்சத்திரம் 2, குமாரபாளையம் 13 என மொத்தம் 108 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்