SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளையப்பட்டி பஸ் ஸ்டாப்பில் அரசு மற்றும் தனியார் பஸ்கள்

8/11/2017 10:43:07 AM

நாமக்கல் : நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் காலை, மாலை நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தாமல் செல்வதால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்காக செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள வளையப்பட்டியில் ஆயரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் திருச்சி, தொட்டியம், முசிறி மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்ல நாமக்கல்- திருச்சி இடையே இயக்கப்படும் பஸ்களை நம்பியுள்ளனர். இந்நிலையில் வளையப்பட்டி பஸ் ஸ்டாப்பில் காலை, மாலை நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பல நிற்காமல் செல்வதால் மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது: சேலம், நாமக்கல், திருச்சி கோட்டங்கள் மூலம் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் நாமக்கல் - திருச்சி வழித்தடத்தில் வளையப்பட்டி வழியாக இயக்கப்படுகிறது. நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. சமீப காலமாக காலை, மாலை மற்றும் இரவு நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வளையப்பட்டி பஸ் ஸ்டாப்பில் நிறுத்துவதில்லை.

இதுகுறித்து கண்டக்டர் மற்றும் டிரைவர்களிடம் கேட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும் என்பதால், வளையப்பட்டியில் பஸ்கள் நிற்காது என்கின்றனர். இதனால் தினமும் கால்கடுக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறித்த நேரத்திற்குள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்ல முடியாமல் மக்களும் அவதிப்படுகின்றனர். எனவே, வளையப்பட்டி பகுதியில் பஸ்களை நிறுத்தி மக்களை ஏற்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்