SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரமத்திவேலூரில் பூக்களின் விலை உயர்வு முதுகலை ஆசிரியர்கள் 3 பேருக்கு பதவி உயர்வு

8/11/2017 10:39:23 AM

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்ற, 3 முதுகலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமிக்க பதவி உயர்வு கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வில், 5 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் எர்ணாபுரம் முதுகலை ஆசிரியர் பழனிச்சாமி, சோளசிராமணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். தரம் உயர்த்தப்பட்ட காவக்காரப்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உலகப்பாளையம் முதுகலை ஆசிரியர் சிவபிரகாசம் பதவி உயர்வு பெற்றார். வேலகவுண்டம்பட்டி முதுகலை ஆசிரியர் பரமேஸ்வரி, ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். இவர்களுக்கு பதவி உயர்வுக்கான உத்தரவை சிஇஓ உஷா வழங்கினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்