SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு

8/11/2017 10:39:13 AM

பரமத்திவேலூர் : வேலூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஆட்டோ, மறறும் இருசக்கர வாகனங்களால் பயணிகள் மற்றும் ெபாதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, வேலூர் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றம் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இடமாக பஸ் ஸ்டாண்ட் விளங்குகிறது.  

வேலூர் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் வசதிக்காக டீக்கடை, ஹோட்டல், ஜூஸ் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. வேலூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரிக்கும், வேலைக்காக செல்ல வேலூர் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் காலை, மாலை நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வேலூர் பஸ் ஸ்டாணடில் கடை வைத்துள்ள வியாபாரிகள், கடைகளை நீட்டிப்பு செய்துள்ளனர்.

மேலும், தங்களின் இருசக்கர வாகனம், பயணிள் ஆட்டோ உள்ளி–்டடவை பிளாட்பாரத்தில் ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். இதனால் பஸ்சுக்கு செல்லும் பயணிகள் அடிக்கடி தடுமாறி விழுந்து அடிபடம் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதத்துக்கு முன் கரூரை சே்ந்தவர், பிளாட்பாரத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தால் கால் இடறி, பஸ் சக்கரத்தில் விழுந்து உயிரிழந்தார். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பஸ் ஸ்டாண்டில் கடைகளின் முன்பு நிறத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றிட வேண்டும் என பொதுமக்களும், சமக ஆர்வலர்களுகம் கோரிக்கை விடு்ததுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்