SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுறவு வங்கியில் திருட முயற்சி: கட்டிட தொழிலாளர்கள் கைது

8/11/2017 10:30:29 AM

கோவை: கோவை சூலூர் அருகேயுள்ள வடவள்ளி கூட்டுறவு வங்கியில் கடந்த மாதம் கொள்ளையடிக்க சிலர் முயன்றனர். வங்கி லாக்கரை உடைக்க முயன்ற போது வங்கியில் இருந்த சைரன் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் திரண்டதால், திருடர்கள் தப்பினர். இது தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருடர்களை தேடி வந்தனர்.

சில நாட்களுக்கு முன், பட்டணம் பகுதியில் டாக்டர் ஒருவர் வீட்டில் 7 பவுன் தங்க நகை திருடப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ைகரேகையும், கூட்டுறவு வங்கி கொள்ளை முயற்சியில் தொடர்புடையவர்களின் கைரேகையும் ஒன்றாக இருந்தது. சந்தேகத்தின் பேரில், அந்த பகுதியில் தங்கியிருந்த கட்டட தொழிலாளர்களை சூலூர் போலீசார் தேடினர். போலீசார் தேடுவதை அறிந்த 3 தொழிலாளர்கள் மாயமானார்கள்.

போலீசார், பல்வேறு இடங்களில் தேடி தலைமறைவாக இருந்த விருதுநகர் சிவகாசி பகுதியை சேர்ந்த ரமேஷ் (20), காளிதாஸ் (26), ராமநாதபுரத்தை சேர்ந்த லோகநாதன் (27) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் டாக்டர் வீட்டில் திருடியதையும், கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதையும் ஒப்பு கொண்டனர். இவர்களிடம் 7 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Exhibitionbeetle

    ஒக்ஸ்வேகனின் 23வது பீட்டில் கார்கள் தினம் கண்காட்சி

  • flood_kanamazhai1

    கனமழையின் ருத்ரதாண்டவத்தால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது

  • 15cars_sand11

    மும்பையில் புதிய கட்டுமான கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து : 15 கார்கள் சேதம்

  • russia_river11

    கண்கவர் வாணவேடிக்கைகளுடன் ரஷ்யாவின் நேவா ஆற்றங்கரையில் நடந்த திருவிழாவின் புகைப்படங்கள்

  • newyork_gay_pride_parade

    நியூயார்க் நகரில் LGBT சமுதாயத்தினர் நடத்திய பிரமாண்ட பேரணியின் காட்சி தொகுப்புகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்