SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவைக்கு வரத்து அதிகரித்ததால் மணல் ஒரு லோடு ரூ.18 ஆயிரம்

8/11/2017 10:30:16 AM

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மணல் வரத்து கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த மாதம் ஒரு லோடு (இரண்டே கால் யூனிட்) ரூ.30 ஆயிரத்திற்கு விற்றது நேற்று ரூ.18 ஆயிரமாக குறைந்தது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மற்றும் கரூர் உள்ளடங்கிய மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு காவிரி ஆற்றங்கரையில் உள்ள குவாரிகளில் இருந்து மணல் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு மணல் பெற்று வரும் லாரி உரிமையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15 லோடு மணல் பெற்று வந்தனர். இதனால் ஜனவரிக்கு முன்பு வரை ஒரு லோடு மணல் ரூ.10 ஆயிரத்திற்கு விற்று வந்தனர்.

இந்நிலையில், இங்குள்ள பெரும்பாலான குவாரிகள் மூடப்பட்டன. ஒருசில குவாரிகள் மூலம் குறைந்த அளவிலான மணலே சப்ளை  செய்யப்பட்டது. இதனால், கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல லாரிகளுக்கு மாதத்திற்கு 2 லோடு மணல் மட்டுமே கிடைத்தது. மணல் பெற 15 நாள் வரை லாரிகள் காத்திருப்பதால், செலவுகள் அதிகரித்து, விலை ரூ.40 ஆயிரம் வரை விற்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் ஆன்லைன் மூலம் மணல் சப்ளை செய்யும் திட்டம் துவங்கியது. இதனால் ஒவ்வொரு லாரிக்கும் மாதத்திற்கு 3 லோடு கிடைக்க துவங்கியது. இதன் எதிரொலியாக கடந்த மாதம் இறுதியில் ஒரு லோடு ரூ.30 ஆயிரமாக குறைந்தது.

கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு லாரிக்கும் வாரம் ஒரு லோடு கிடைக்க துவங்கியதால், வரத்து அதிகரித்து, விலை குறைய துவங்கியது. கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் விலை ரூ.25 ஆயிரத்திற்கு குறைந்தது. 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.24 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக விலை மேலும் குறைந்தது. நேற்று ரூ.18 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. எனினும் 6 மாதத்திற்கு முந்தைய விலையான ரூ.10 ஆயிரத்தை அடைய வேண்டும், என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் (திருப்பூர்), செயலாளர் சந்திரிகாமணி, அமைப்பாளர் மணி (கோவை) ஆகியோர் கூறுகையில், கோவை மாவட்டத்திற்கு கடந்த மாதம் வரை தினசரி 500 லோடு மணல் வந்தது. கடந்த 10 நாட்களாக குவாரிகளில் முறைகேடுகள் ஓரளவு தடுக்கப்பட்டு மணல் சப்ளை படிப்படியாக அதிகரித்து, நேற்று 2,500 லோடு வரை வந்தது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை விரைவில் ஒரு லோடு ரூ.10 ஆயிரத்திற்கு வரும் வாய்ப்புள்ளது’ என்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்