SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய பாடத்திட்டம் கருத்து கேட்பு கூட்டம்

8/11/2017 10:30:03 AM

கோவை: பள்ளிக் கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் தயாரிப்புக்கான கருத்துகேட்பு கூட்டம் கோவையில் இன்று நடக்கிறது. தமிழக பாடத் திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்து வருகிறது. இதனால் கல்வித்துறையின் மீது விமர்சனங்கள் அதிகரித்து வந்தது. புதிய கல்வித்துறை செயலாளராக உதயசந்திரன் பொறுப்பு ஏற்றபின், கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களுக்கு நிகராக, அகில இந்திய போட்டித் தேர்வுகளை அரசுப்பள்ளி மாணவர்களை தயார் செய்யும் வகையில்  புதிய பாடதிட்டங்களை வடிவமைக்கும் பணி கல்வித்துறை சார்பில் துவங்கப்பட்டது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட பாடத்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

மாணவர், ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்களிடம் இதுகுறித்து குழு ஆலோசனை நடத்தி வருகிறது. கருத்துகேட்பு கூட்டம் கடந்த மாதம் சென்னையிலும், கடந்த 9ம் தேதி மதுரையில் நடந்தது. இந்நிலையில் கோவை காளப்பட்டியில் உள்ள என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியில் இன்று(11ம்தேதி) கருத்துகேட்பு கூட்டம் நடக்கிறது.

இதில் அனந்தகிருஷ்ணன், எஸ்.சி.இ.ஆர்.டி இயக்குனர் அறிவொளி உள்பட பலர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 8 மாவட்டத்தை சேர்ந்த கல்வி அலுவலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பாடத்திட்டத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், புகுத்தப்பட வேண்டிய பாடதிட்டம் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவிக்க உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்