SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

100 சதவீதம் கல்வியறிவு பெற்ற ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு விருது

8/10/2017 10:08:49 AM

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நூறு சதவீத கல்வியறிவு பெற்ற ஊராட்சிகள், தமிழக அரசு வழங்கும் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஊரகப்பகுதிகளில்  உள்ள ஏழை மகளிரின் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு சதவீதம் குறைவாக உள்ளது.  இதனை மாற்றி, 100 சதவீத எழுத்தறிவு பெற்ற அமைப்புகளாக உருவாக்கும் வகையில்,  ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து சுய  உதவிக்குழு உறுப்பினர்கள், தங்களது குழுக்களில் உள்ள கல்வியறிவற்ற  மகளிருக்கு, படித்த உறுப்பினர்களை கொண்டு, கல்வி கற்றுத்தர எடுக்கும்  கூட்டு முயற்சி அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கப்படும்.ஊராட்சி  அளவிலான கூட்டமைப்பில் உள்ள அனைத்து சுய உதவிக்குழு உறுப்பினர்களையும் 100  சதவீத கல்வியறிவு உள்ள மகளிராக உருவாக்கிய கூட்டமைப்புகளுக்கு மாநில  மற்றும் மாவட்ட அளவில் விருது வழங்க உள்ளதால், வட்டாரங்களில் சிறப்பாக  செயல்படும் குழுக்கள், வரும் 9ம் தேதிக்குள் தங்கள் குழுவின்  கருத்துருக்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க  வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.    

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2017

    23-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • denguefeverdmkchennai

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: திமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

  • vinayagar_parisuthhh

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் பரிசுகள் வழங்கினார்

  • EuropeTeeth

    9.7 மில்லியன் ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டுபிடிப்பு: மனித இனம் முதலில் ஐரோப்பாவில் தோன்றியதற்கான சான்றா?

  • Policecommemorationdayparade

    காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு: நாடு முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்