SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை அமிர்தாவில் விரைவில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள்

7/17/2017 11:30:59 AM

சென்னை அமிர்தாவில் விரைவில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள் துவக்கப்படும் என்று தலைமை நிர்வாக அதிகாரி பூமிநாதன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை நடத்தி வந்த சென்னை அமிர்தா கல்லூரி, தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகளையும் தொடங்க உள்ளது. இதற்காக கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள பி.காம், பிபிஏ, பி.எஸ்சி, எம்பிஏ உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை சென்னை அமிர்தா வழங்கும்.

கல்வி துறையில் சென்னை அமிர்தா கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு, சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துள்ளனர். கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதி மாணவர்களுக்கு ஊக்கத்தை தந்து கலை மற்றும் அறிவியல் படிப்புகளும் சிறந்து விளங்க உதவியாக இருக்கும். உள்கட்டமைப்பு வசதி, கல்வி துறையில் உள்ள அனுபவம், உயர் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்டவற்றால் ஓட்டல் மேனேஜ்மென்ட்டில் சிறந்து விளங்கியதுபோல், கலை மற்றும் அறிவியல் துறையும் விளங்கும். மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது என தலைமை நிர்வாக அதிகாரி பூமிநாதன் கூறினார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்