SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சமலையில் அரசு உண்டு உறைவிட பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்

7/17/2017 10:50:22 AM

துறையூர்:  ஆங்கில கல்விக்காக தனியாருக்கு மாணவர்கள் படையெடுப்பால் பச்சமலையில் அரசு பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளது. அரசு வாரி வழங்கிய சலுகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம், சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியங்களில் அமைந்துள்ளது பச்சமலை. திருச்சி மாவட்டத்தில் 3 ஊராட்சிகளும், சேலம் மாவட்டத்தில் 1 ஊராட்சியும் உள்ளது. உப்பிலியபுரம் ஒன்றியத்தில் டாப்செங்காட்டுப்பட்டி, துறையூர் ஒன்றியத்தில் செம்புளிச்சான்பட்டி ஆகிய இடங்களில் அரசு உண்டு உறைவிட மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. பச்சமலையில் உள்ள அனைத்து ஊர்களிலும் மாணவர்கள் தங்கி படிக்கும் அரசின் உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளது. இங்கு 3 வேளை உணவுடன் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது. தற்போது அந்த பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமல் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. மாணவர்கள் பெரும்பாலும் துறையூர் பெருமாள்பாளையம், முருங்கப்பட்டி, செங்காட்டுப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேருகின்றனர்.இதனால் பச்சமலையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது. சில பள்ளிகளில் 1 மாணவர் மட்டுமே உள்ளார். இந்த பள்ளிகள் அனைத்துமே ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படுகிறது. மணலோடை பள்ளியில் 5ம் வகுப்பில் மட்டும் வெங்கடேசன் ஒரு படிக்கிறார். சின்னபழமலையில் மாணவர்களே இல்லை. பெரியபழ மலையில் 1 மாணவர், தோனூரில் 5 வகுப்புகளிலும் சேர்த்து 13 மாணவர்களும், தாளூரில் 11 மாணவர்களும் மட்டுமே உள்ளனர். அங்கு அனைத்து பள்ளிகளுமே ஈராசிரியர் பள்ளிகள் மற்றும் சமையலர்கள் கொண்ட பள்ளிகள் ஆகும். ஒரு மாணவனுக்காக இயங்கும் பள்ளிக்காக அரசு செலவழிப்பது ஆசிரியர் சம்பளம் உள்பட மாதம் ரூ.1லட்சம் வரையாகும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் இல்லாத நிலையில் தோனூர் அருகே இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 38 மாணவர்கள் எல்கேஜி, யுகேஜி மற்றும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

ஆனால் இந்த பள்ளிக்கு அரசு அங்கீகாரம் இல்லை என கூறப்படுகிறது. அங்கீகாரம் இல்லாத பள்ளி மலைபகுதியில் செயல்படுவது பற்றி இதுவரை மாவட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அலுவலருக்கு எப்படி தெரியாமல் போனது என புரியாத புதிராக உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், எங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி  சொல்லித் தருகிறேன் என்றார்கள். ஏன் எங்கள் குழந்தைகள் ஆங்கிம் கற்கக்கூடாதா? இங்குள்ள அரசு பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தந்தால் நாங்கள் ஏன் தனியார் பள்ளிகளுக்கு எங்கள் குழந்தைகளை அனுப்ப போகிறோம். அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அரசு பல்வேறு கணக்கெடுப்புகளை நடத்தி பள்ளிசெல்லாகுழந்தைகள் கண்டறியப்பட்டும், மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் திண்டாடினர். ஆனால் ஆரம்பித்த ஒரே மாதத்தில் தனியார் பள்ளியில் மட்டும் எப்படி 38 மாணவர்களை சேர்க்க முடிந்தது. தோனூர் உண்டு உறைவிட பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் 1 கிமீ தூரம்தான் உள்ளது. தோனூரில் முதல் வகுப்பில் 1 மாணவர் உள்பட 13 பேர் மட்டுமே உள்ளனர். உண்டுஉறைவிட பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் யாரும் சரியாக வருவதே கிடையாது. துறையூர் ஒன்றியத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளான மணலோடை தாளூர், சின்னபழமலை தோனூர், புத்தூர்பாளையம், குறிச்சி நாகூர், ராமநாதபுரம், மருதை, சின்னஇலுப்பூர் போந்தை, கிணத்தூர் உள்ளிட்ட பள்ளிகளின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே 150க்கும் குறைவுதான். அரசு எவ்வளவோ சலுகைகள் வழங்கியும் உண்டு உறைவிட பள்ளிகளில் ஏன் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது. இதற்கான காரணம் குறித்து பழங்குடியினர் துறை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பச்சமலையில் உள்ள அரசு உண்டி உறைவிடப் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளது என்றனர்.

சிக்கன், முட்டை கிடையாது
துறையூரில் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு செலவில் பாட புத்தகங்கள், உணவு, ஒவ்வொரு புதன்கிழமையும், சிக்கன் அல்லது மட்டன், தினசரி முட்டை, மாலையில் சுக்கு காபியுடன் கொண்டை கடலை ஆகியவையும், குளியல் சோப்பு, எண்ணை, தலைமுடி வெட்டவும் பணம் வழங்கப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

அரசு சலுகைகள் இருட்டடிப்பு பெற்றோர்கள் சரமாரி குற்றச்சாட்டு அங்கீகாரம் பெறாத பள்ளி கலெக்டருக்கு அறிக்கை

சம்மந்தப்பட்ட மெட்ரிக் பள்ளி அங்கீகாரம் பெறாத நிலையில் மாணவர்களை எப்படி சேர்த்தார்கள் என்பது புரியவில்லை. பச்சமலைக்கு ஆய்வு பணிக்காக சென்றபோது தனியார் பள்ளியை ஆய்வு செய்ததில், கட்டிடம் கட்ட அனுமதி பெற வில்லை என்பது தெரிந்தது. எனவே இதுபற்றி மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என துறையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் (ஊராட்சிகள்) பழனியப்பன் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில் ஆய்வுமேற்கொண்டபோது, அந்த பள்ளியில் இரண்டு ஆசிரியைகள், ஒரு ஆயா பணிபுரிவதும், பள்ளி அனுமதி பெறவில்லை என்பதும், பள்ளி அனுமதி பெறாதது குறித்தும், அனுமதி இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை குறித்தும் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாகவும், கலெக்டரின் உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அனுமதி பெறாமல் துவங்கப்பட்டுள்ள தனியார் பள்ளியில் 1 மாணவனுக்கு ரூ.7,000 கட்டணமாக பெறப்படுகிறது என  துறையூர் பழங்குடியினர் திட்ட அலுவலர் கமலம் தெரிவித்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

  • ANDHIRA_MANILAM11

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மாநிலமெங்கும் ஏராளமானோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்