SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூச்சு திணறல் மத்தியசிறை ஆயுள் கைதி சாவு

7/17/2017 10:50:08 AM

திருச்சி:  திருச்சி மத்திய சிறையில் அரியலூரை சேர்ந்த ஆயுள்கைதி மூச்சுதிணறல் காரணமாக உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் கீழபழூர் அருகே உள்ள திருவிடைசேரி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (62). இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2003ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் செல்வராஜிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து சிறைதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறை துறை அதிகாரிகள் மற்றும் கே.கே.நகர் போலீசார் செல்வராஜ் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜ் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என சிறைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • neelakkrinji11

    பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் - 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து குலுங்குகிறது

  • bhuvaneshkumar_marriage

    இனிதாக நடந்த புன்னகை பொங்கும் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாரின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்

  • PrimeMinisters

    பிரதமர் மோடி - இலங்கை பிரதமர் இடையே பேச்சுவார்த்தை

  • 24-11-2017

    24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்