SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருமண்டபத்தில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளை

7/17/2017 10:50:01 AM

திருச்சி:  திருச்சி கருமண்டபத்தில் அடுத்தடுத்து 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகர் 1வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (50). வங்கி ஊழியர். இவர் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்றுமுன்தினம் குடும்பத்தினருடன் சென்றுவிட்டு  நேற்று மதியம் வீட்டிற்கு வந்தபோது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக செஷன்ஸ் கோர்ட் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. கருமண்டபம் ஸ்ரீராம் நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் சேதுராமன்(60) ஓய்வு பெற்ற பெல் ஊழியர். இவர் தனது குடும்பத்தினருடன் கரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இவரது வீட்டின் மாடியில் குடியிருக்கும் திமுக பிரமுகர் ஆறுமுகவேல்(42) என்பவர் குடுபத்தினருடன் தேவக்கோட்டையில் நடைபெறும் திருமண விழாவிற்கு சென்றுவிட்டார். இதனால் மெயின் கேட் பூட்டப்பட்டிருந்தது.

நேற்றிரவு கருமண்டம் திரும்பிய ஆறுமுகவேல் வீட்டிற்குள் செல்ல முயன்றபோது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோல கீழ்தளத்தில் உள்ள சேதுராமன் வீட்டின் முன்பக்க கதவும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செஷன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ஒரு அறையில் இருந்த பீரோ மற்றும் அலமாரி திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. ஆறுமுகவேல் வீட்டில் ரூ.5 ஆயிரம் பணம், 5 பவுன் நகை திருடு போயிருக்காலம் என கூறப்படுகிறது. சேதுராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பிறகு தான் கொள்ளை போனது குறித்து தகவல் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இதேபோல ஜெயா நகரில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரே நாள் இரவில் கருமண்டபத்தில் அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் குறித்து செஷன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2018

    20-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MigrantsMexicoAmerica

    திறந்தவளி ரயிலில் மெக்சிகோ வழியாக பயணம் செய்த டயஸ்போரா மக்கள்: புகைப்படங்கள்..

  • OklahomaBushFire

    மேற்கு ஒக்லஹோமாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 2,60,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்: 2 பேர் உயிரிழப்பு

  • bushwifecondolences

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

  • fireaccidentsafety

    சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்