SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடுநிலைப்பள்ளி மாணவர்களும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி

7/17/2017 10:25:50 AM

கோவை, : பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், குறுமையம், குடியரசு தினவிழா போட்டி, பாரதியார் தினவிழா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. இதுதவிர மாவட்டம், மண்டலம் அளவிலான நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியரசு தினவிழா, பாரதியார் தினவிழா போட்டியில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி மட்டும் நடத்தப்படுகிறது. 6, 7 மற்றும் 8ம் வகுப்பு உள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால், கல்வித்துறை நடத்தும் போட்டியில் பங்கேற்பதில்லை. இந்நிலையில் கல்வித்துறை சார்பில் நடக்கும் குடியரசு தினவிழா, பாரதியார் தினவிழா போட்டிகளில் நடுநிலைப்பள்ளி மாணவர்களை பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் மூலம் உரிய பயிற்சி  வழங்கப்பட்டு, போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2017

    21-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • stone_lay_eggs11

    30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டையிடும் விசித்திர மலை குன்று!- குழப்பத்தில் விஞ்ஞானிகள்

  • black_sea123

    கருங்கடலில் 2500 ஆண்டுகள் பழமையான 60 கப்பல்கள் கண்டுபிடிப்பு

  • rain_train_flightss

    கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை : ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து

  • mexico_earthquakkee

    மெக்சிகோ நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் : 250 பேர் பலி ; கட்டடங்கள் தரைமட்டமாகின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்