SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்பராமரிப்பு காரணமாக பெரிய கடைவீதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

7/17/2017 10:25:44 AM

கோவை, : கோவை பெரியகடைவீதி பகுதியில் இருந்து கூட்செட் செல்லும் சாலையின் அருகே மின்பராமரிப்பு பணி நேற்று நடந்தது. இந்த பணிக்காக அப்பகுதியில் உள்ள பெரிய மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன. இதனால், கூட்செட் சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் ரயில்நிலையம் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மழைநீர் வடிகால் பணி காரணமாக லங்கா கார்னர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால், கோவை அரசு மருத்துவமனையில் இருந்து வரும் வாகனங்கள் லங்கா கார்னர் ரயில்வே பாலத்தை கடந்து வந்து பின்னர் ரயில்நிலையம் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக பெரிய கடைவீதியில் இருந்து ரயில்நிலையம் சென்ற வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நின்றன. இதனால், பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், பெரிய கடைவீதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X