SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

7/17/2017 10:24:24 AM

ஆத்தூர், : முன்னாள் முதல்வர் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, ஆத்தூரில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சாரதா ரவுண்டானா நேரு ஸ்தூபி முன்புள்ள அவரது சிலைக்கு நகர தலைவர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் ஒசுமணி, முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், முனுசாமி, சித்தமலை, பெரியசாமி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அன்புநிதி, ராமன், நடராஜன், தீலிப்குமார், கஜேந்திரன், ஜோதிபாசு, வட்டார தலைவர்கள் சோமசுந்தரம், பெரியசாமி, கல்லை.கருப்பண்ணன், தங்கராஜூ, சேகர் செந்தில், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோட்டை சிவன் கோயில் முன்புள்ள சிலை, முள்ளுவாடி கிருஷ்ணர் கோயில் முன்பு உள்ள சிலை, மஞ்சினியில் உள்ள சிலைகளுக்கும் மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஓமலூர்: ஓமலூரில் தமாகா சார்பில் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் பஸ் ஸ்டாண்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தொடர்ந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இதில் மாநில இளைஞரணி பொது செயலாளர் ரகுநந்தகுமார்,  வட்டார  தலைவர் ராஜேந்திரன், நகர தலைவர் மணிகண்டன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் சின்னையன்,  மாணவரணி மாவட்ட செயலாளர் சச்சு  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அத்துடன் அரசு  துவக்கப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

வாழப்பாடி: வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிமாறன், நிர்வாகிகள் வெண்ணிலவன், நகர தலைவர் ரவிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளம்பிள்ளை: மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ரங்கசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் பெரியசாமி வரவேற்றார். இதில், பிடிஏ தலைவர் தங்கவேல் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. தலைமையாசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மாணவர்கள் சந்திரசேகரன், சண்முகம், சந்திரகாந்தன், பெரியசாமி, சங்கரராஜன், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தாரமங்கலம்: காமராஜர் பிறந்த நாளையொட்டி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஓலைப்பட்டி நாடார் காலனி அரசு தொடக்கப்பள்ளி மாணவ ,மாணவியர்கலுக்கு கட்டுரை, பேச்சு, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் மாதேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தன், ராமலிங்கம், ஆகியோர் செய்திருந்தனர்.

கெங்கவல்லி: கெங்க வல்லி அருகே ஆணையாம்பட்டி நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டன. பள்ளி  தலைவர் கதிர்வேல் செயலாளர் அத்தியப்பன், பொருளாளர் சிவாஜி ஆகியோர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல்வர் முருகேசன் நன்றி கூறினார். இதே போல்,கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கெங்கவல்லி கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஆணையாம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவருமான அருள் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி தலைமையாசிரியர் (பொ) கருப்பையா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இடைப்பாடி:  இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பழனிச்சாமி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியை கவிதா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மாரிமுத்து, ராஜமாணிக்கம், வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டடது. இதேபோல் வெள்ளாண்டிவலசை முனியப்பன் கோயில் சந்து பகுதியில் நடந்த விழாவில், காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் சிவாஜிகணேசன், ரவிகுமார், சசிகுமார், கவுதம், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காடையாம்பட்டி : காடையாம்பட்டி ஒன்றிய தமாகா சார்பில், தீவட்டிப்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டார தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். நகர தலைவர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் கலந்துகொண்டு, காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து தீவட்டிப்பட்டி காலனி பகுதியில் நடந்த விழாவில், மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. விழாவில், தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி, தமாகாவில் இணைந்தனர். மாவட்ட தலைவர் அனைவரையும் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில்  இளைஞரணி மாநில பொது செயலாளர் ரகுநந்தகுமார், ஓமலூர் வட்டார தலைவர் ராஜேந்திரன்,  தொழிற்சங்க மாவட்ட தலைவர் சின்னையன், மலர்மண்ணன், கிருஷ்ணராஜ், செந்தில்குமார், முருகன், சீனிவாசன், வெங்கடேஷ், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2017

    21-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • stone_lay_eggs11

    30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டையிடும் விசித்திர மலை குன்று!- குழப்பத்தில் விஞ்ஞானிகள்

  • black_sea123

    கருங்கடலில் 2500 ஆண்டுகள் பழமையான 60 கப்பல்கள் கண்டுபிடிப்பு

  • rain_train_flightss

    கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை : ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து

  • mexico_earthquakkee

    மெக்சிகோ நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் : 250 பேர் பலி ; கட்டடங்கள் தரைமட்டமாகின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்