SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஆக.7ம் தேதி தலைமை செயலகம் முற்றுகை

7/17/2017 10:24:10 AM

சேலம், :  பாஜக இளைஞரணி சார்பில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் உள்பட  மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 7ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று  மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பா.செல்வம்தெரிவித்தார்.
பாஜக இளைஞரணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பா.செல்வம் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் மாரிசக்கரவர்த்தி, வசந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் சிவகுமார், பொதுசெயலாளர் ராம்குமார், மாநகர் மாவட்ட பாஜ தலைவர் கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர்  மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பா.செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:ஆகஸ்ட் 7ம் தேதி பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகை யிடும் போராட்டம் நடக்கிறது.

இது தொடர்பாக மாநிலம் முழுவதும் இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதில் வேறு இடத்தில் கடைகள் திறக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று கடைகள் திறந்தால், அப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2017

    21-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • stone_lay_eggs11

    30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டையிடும் விசித்திர மலை குன்று!- குழப்பத்தில் விஞ்ஞானிகள்

  • black_sea123

    கருங்கடலில் 2500 ஆண்டுகள் பழமையான 60 கப்பல்கள் கண்டுபிடிப்பு

  • rain_train_flightss

    கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை : ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து

  • mexico_earthquakkee

    மெக்சிகோ நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் : 250 பேர் பலி ; கட்டடங்கள் தரைமட்டமாகின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்