SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ், பிட்னஸ் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு

7/17/2017 10:23:59 AM

சேலம், :சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ், பிட்னஸ் போட்டிக்கு சேலத்தில் மாநில அளவில் வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி நடந்தது. சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ், பிட்னஸ் போட்டி, கோவாவில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க மாநில அளவிலான வீரர், வீராங்கனைகள் தேர்வு, சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. போட்டியை ஏரோபிக்ஸ் சங்க மாநில தலைவர் வஸ்தாத்.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பொது செயலாளர் தத்தாத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  போட்டிகள் 8, 10, 12, 17, 19 வயது வரையுள்ளவர்களுக்கும், தனிநபர் பிரிவு, இரட்டையர் பிரிவு, ஆண், பெண் இருவர் பிரிவு, குழு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் நடந்தது. போட்டியில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் முதல் இடங்கள் பிடித்த வீரர், வீராங்கனைகள் கோவாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்கின்றனர் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2018

    22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X