SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் போன்ற போட்டித்தேர்வுக்காக ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவது நியாயமற்றது: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேச்சு

7/10/2017 11:42:33 AM

சேலம்,ஜூலை 10:தமிழக அரசு நீட் போன்ற போட்டித்தேர்வுகளுக்காக ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது நியாயமற்றது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாட்டில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறினார். சேலம் நான்கு ரோட்டில் உள்ள சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்டத்தின் சார்பில் 13வது மாவட்ட மாநாடு நடந்தது.  மாநாட்டிற்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் ஏற்காடு இளங்கோ தலைமையேற்றார். சேலம் நகர கிளைசெயலாளர் லால் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, மாநில பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கலந்து கொண்டு பேசியது,
அறிவியலும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மக்களின் பயன்பாட்டிற்கே என்பதை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 13வது மாவட்ட மாநாடு. புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும்போது அது குழந்தைநேய பாடத்திட்டமாக உருவாகிறது.  நீட் போன்ற போட்டித்தேர்வுகளுக்காக ஒரு பாடத்திட்டம்  உருவாகுவது என்பது நியாயமற்றது. மாணவர்கள் முழுமையாக கற்று பல்துறை அறிஞர்களாக வருவதற்கு வாய்ப்பு தரக்கூடிய ஒரு பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.

மத்திய அரசை பொறுத்தவரை மாநில உரிமையை பறிக்கும் வகையில், நீட் தேர்வில் பிடிவாதம் பிடிக்காமல் சட்டமன்றத்தில் இயற்றிய இரண்டு சட்ட மசோதாவுக்கு உடனடியாக குடியரசு தலைவர் ஒப்புதலை அளிக்கவேண்டும். இதன் அடிப்படையில் மட்டுமே மருத்துவ கலந்தாய்வுக்கு நடத்தப்பட வேண்டும். நீட் மதிப்பெண்ணின் அடிப்படையில் இருக்ககூடாது என்ற கோரிக்கைகள் இம்மாநாடு முன்வைப்பதாக கூறினார். மேலும், அரசு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. நேற்று நடந்த மாவட்ட மாநாட்டில், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சேதுராமன், தியாகராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்