SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்கம்

7/10/2017 10:24:57 AM

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சாயிகுமார் தலைமை வகித்தார். தமிழாசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தின்னூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராம்குமார் பங்கேற்று, இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்தார்.  அப்போது, தமிழ் இலக்கணத்தை ஆடல் பாடலுடன் எளிமையாக எப்படி கற்கலாம் என்பதை பல சான்றுகளுடன் விளக்கினார். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் நஞ்சக்குமார் பங்கேற்று, மாணவர்கள் எப்படி ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார். இந்த விழாவினையொட்டி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஒவ்வொரு மாணவ, மாணவியும் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தினர். விழாவில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தமிழாசிரியர் பைரப்பன் நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்