SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தரபிரதேசத்தில் வெறிச்செயல் சென்னை புதுமண தம்பதி மீது மர்ம ஆசாமிகள் துப்பாக்கி சூடு விருந்துக்கு சென்ற இடத்தில் சோகம்

6/19/2017 12:59:32 PM

சென்னை: உத்தரப்பிரதேசத்தில் உள்ள அத்தை வீட்டிற்கு விருந்துக்கு சென்ற, சென்னையை சேர்ந்த புதுமண தம்பதி மீது, மர்ம ஆசாமிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயமடைந்த அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் ஆதித்யகுமார் (31). சென்னை வளசரவாக்கம், ராமாபுரம், ஆனந்தம் நகர், 4வது தெருவில்,  வாடகை வீட்டில்  தங்கி ராமாபுரத்தில் பிரபல தனியார் நிறுவனத்தில், அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
ஆதித்யகுமாரும், அதே நிறுவனத்தில் பணிபுரிந்த கர்நாடக மாநிலம், குல்பர்காவை சேர்ந்த விஜயலட்சுமி (28) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.  இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியர் வளசரவாக்கம் ராயலா நகர் பகுதியில் புதிதாக வாடகை வீட்டில் குடியேறினர்.  இந்நிலையில், ஹரித்துவாரில் உள்ள ஆதித்யகுமாரின் அத்தை வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு புதுமண தம்பதியை அழைத்துள்ளனர். இதையடுத்து ஆதித்யகுமார், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் இவரது நண்பர் சியாம் தேஜா ஆகிய மூவரும் கடந்த ஜூன் 3ம் தேதி விமானம் மூலம் ஹரித்துவார் சென்றனர். அத்தை வீட்டில் விருந்து முடிந்ததும், அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். பின்னர், நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வருவதற்கு, முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அங்கு புதுமண தம்பதி ஒரு பைக்கிலும், அவரது  நண்பர் சியாம்தேஜா மற்றொரு பைக்கிலும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து டெல்லி திரும்பி கொண்டிருந்தனர். உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகர், ஹரித்துவார்-டெல்லி நெடுஞ்சாலை, பாகேவாலி காவல் நிலையம் எதிரே சென்று கொண்டிருந்தனர்.  அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஆதித்யகுமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், துப்பாக்கி தோட்டா ஆதித்யகுமார் அணிந்திருந்த ஹெல்மெட்  பக்கவாட்டின் வழியாக சென்று, தாடையை கிழித்து, வாய் வழியாக தோட்டா வெளியேறியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி புதுமண தம்பதி பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த ஆசாமிகள் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பைக்கில் முன்னால் சென்று கொண்டிருந்த நண்பர் சியாம்தேஜா, இருவரையும் மீட்டு அங்கு உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.  அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து ஆதித்யகுமாரின்  குடும்பத்தினர் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதுபற்றி, அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி உத்தரபிரதேச போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  ஆள் மாற்றி தவறுதலாக  சென்னை தம்பதியை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டார்களா, கொள்ளையடிக்க முயற்சியா அல்லது முன்விரோதத்தால் சுட்டார்களா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், ஆதித்யகுமார் பணிபுரியும் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் விளையாடி வருவதாகவும், அதில், ஏதாவது முன்விரோதமா அல்லது காதல் திருமணம் என்பதால், தகராறா என்றும் வளசரவாக்கம் ராயலாநகர் போலீசாரும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Dinakaran_Education_Expo

  சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

 • mald123

  உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

 • Marijuana420Festival

  போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

 • milkcenterchennai

  சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

 • 21-04-2018

  21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்