SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் குடோனில் மீண்டும் பதுக்கல் 40 மூட்டை போதைப்பொருள் பறிமுதல் * ஊழியர்கள் 8 பேரிடம் விசாரணை * சென்னை அருகே மீண்டும் பரபரப்பு

6/19/2017 12:59:20 PM

சென்னை: சென்னை அருகே வடபெரும்பாக்கம், கன்னியம்மன் நகரில்  இயங்கும் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 மூட்டை போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 8 ஊழியர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் கன்னியம்மன் நகரில் தனியாருக்கு சொந்தமான குடோன்கள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள ஒரு குடோனில்   போதைப்பொருட்கள் அதிகம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மதியம் போலீசார் சம்பந்தப்பட்ட குடோனில் அதிரடி  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசு தடை விதித்து உள்ள  பான்பராக், குட்கா உள்பட போதை பொருட்கள் 40 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இவற்றை  போலீசார் பறிமுதல் செய்து குடோன் ஊழியர்கள் 8 பேரை பிடித்து, விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில்,  பெங்களூருவில் இருந்து இவற்றை கொண்டு வந்து பதுக்கி, சிறிய கடைகளில்  வினியோகம் செய்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோனின் உரிமையாளர் யார், அனுப்பியது யார், இதுபோன்று, வேறு எங்கெல்லாம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துகின்றனர். இந்த குடோனில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.    



பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indiaBLADEREMONCAL

    இந்தியாவிலேயே முதல் முறையாக வாலிபரின் மூச்சு குழாயில் பிளேடு துண்டுகள் அகற்றம்: ஸ்டான்லி டாக்டர்கள் சாதனை

  • cave_1_southh

    நீண்ட மண்டை ஓடு மற்றும் மூன்று விரல்களை கொண்ட விசித்திர மம்மி : குகையில் கண்டுபிடிப்பு

  • 29-06-2017

    29-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்