SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனாம்பேட்டையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் மறியலில் ஈடுபட்ட கட்சியினர் கைது

6/19/2017 12:59:12 PM

சென்னை: மதுக்கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தேனாம்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் மதுக்கடைகளுக்கு பூட்டு போட்டும், மதுக்கடைகளை சூறையாடியும் வருகின்றனர். இந்நிலையில், சென்னை தேனாம்ேபட்டை திருவள்ளுவர் சாலையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்ேகாரி அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை மதுக்கடை அகற்றப்படவில்லை. இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மதுக்கடைக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மதுக்கடையை இந்த பகுதியில் இருந்து நிரந்தரமாக மூடக்ேகாரி தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்ததும் தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டோர் மதுக்கடையை நிரந்தரமாக மூடும் வரை நாங்கள் கலைந்து ெசல்ல மாட்டோம் என்று கூறி திருவள்ளுவர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மதுக்கடைக்கு பூட்டு போட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்