SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போத்தனூர் - பொள்ளாச்சி பாதையில் பணி முடிந்தும் ரயில் இயக்கம் இல்லை

6/19/2017 11:38:03 AM

கோவை: போத்தனுார்-பொள்ளாச்சி அகல ரயில் பாதை பணிகள் முடித்து நான்கு மாதங்களாகியும் ரயில் போக்குவரத்து துவங்கப்படவில்லை.
 போத்தனுார்-பொள்ளாச்சி இடையேயான, 40 கி.மீ., அகலரயில் பாதை பணிகள், ரூ.349 கோடி மதிப்பீட்டில், கடந்த 2009ம் ஆண்டு துவங்கியது. நிலம் கையகப் படுத்துதல், பாலங்கள் கட்டுதல் என ஆமை வேகத்தில் நடந்து வந்த பணிகள் கடந்த மார்ச் இறுதியில் நிறைவடைந்தது. இதையடுத்து போத்தனுாரில் இருந்து பொள்ளாச்சிக்கு, டீசல் இன்ஜின் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் மாதம் போத்தனுார்-பொள்ளாச்சி வழியாக, ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை புதிய ரயில் இயக்கத்திற்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

 தென் மாவட்டங்களுக்கு இந்த வழித்தடத்தில் குறைந்த நேரத்தில் சென்றுவிடலாம் என்பதால், பயணிகளிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து. ஆனால் கோவையிலிருந்து, பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இயக்கப்பட்ட, சிறப்பு ரயில்கள் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததாகக் கூறி ரத்து செய்யப்பட்டது. தெற்கு ரயில்வேயின் இந்த செயல்கள் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் புதிய ரயில் இயக்கப்படவில்லை. இதுவரை ஒரு அறிவிப்பு கூட வெளியிடவில்லை. இதனிடையே ரயில் இயக்காமல் காலம் தாழ்த்திவரும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ரயில் ஆர்வலர்கள் குழுவினர் பொள்ளாச்சி-போத்தனுார் வழித்தடத்தில், போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வரை
நடந்து சென்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Exhibitionbeetle

    ஒக்ஸ்வேகனின் 23வது பீட்டில் கார்கள் தினம் கண்காட்சி

  • flood_kanamazhai1

    கனமழையின் ருத்ரதாண்டவத்தால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது

  • 15cars_sand11

    மும்பையில் புதிய கட்டுமான கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து : 15 கார்கள் சேதம்

  • russia_river11

    கண்கவர் வாணவேடிக்கைகளுடன் ரஷ்யாவின் நேவா ஆற்றங்கரையில் நடந்த திருவிழாவின் புகைப்படங்கள்

  • newyork_gay_pride_parade

    நியூயார்க் நகரில் LGBT சமுதாயத்தினர் நடத்திய பிரமாண்ட பேரணியின் காட்சி தொகுப்புகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்