SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனைகட்டியில் நோய் பரவும் அபாயம் பவானி ஆற்றில் பொது கழிப்பிட கழிவுநீர் கலப்பது கண்டுபிடிப்பு\

6/19/2017 11:37:51 AM

கோவை: கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் பொது கழிப்பிடத்தின் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  
  கோவை ஆனைகட்டி தமிழக, கேரள எல்லை பகுதியில் பவானி ஆறு செல்கிறது. தற்போது, ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. ஆற்றின் தமிழக எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிகளவிலான குப்பை போடுவதாகவும், அப்பகுதியில் உள்ள பொதுகழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் கேரள மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கழிவுநீர், குப்பைகள் காரணமாக ஆற்றில் குட்டை போல் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி வருகிறது. இதனால், நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கேரளாவை சேர்ந்தவர்கள் பாலக்காடு கலெக்டரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் பவானி ஆற்றில் கடந்த வாரம் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் போது ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவது தெரியவந்தது. மேலும், பொது கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பைப் வழியாக ஆற்றில் கலப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்த அறிவுறுத்தியுள்ளனர்.
 இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பவானி ஆற்றில் ஆனைகட்டி பொதுகழிப்பிடத்தில் இருந்து கழிவுநீர் கலக்கப்படுகிறது. இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசியுள்ளோம். அவர் கழிவுநீர் கலப்பது தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இப்பகுதியில் தற்போது டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் எதுவும் இல்லை. நோய் பரவுவது தொடர்பாக விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • jammu_modii111

    ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

  • AyodhyaDiwali

    அயோத்தி சரயு நதிக்கரையில் 1.75 லட்சம் விளக்குகள் ஒளிவெள்ளத்துடன் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்