SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக் நிறுத்தியதில் தகராறு கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி

6/19/2017 11:08:00 AM

சேலம்: சேலத்தில் பைக் நிறுத்தியதில் ஏற்பட்ட தகராறில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். சேலம் வடக்கு அழகாபுரம் கணக்குபிள்ளைதெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் கனகராஜ் (21). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டு முன் நேற்று முன்தினம் இரவு பக்கத்தில் வசிக்கும் பழனிமுத்து, அவரது மகன் வசந்தகுமார் ஆகியோர் இரண்டு பைக்குகளை நிறுத்தியுள்ளனர். இதனால் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த கனகராஜ், பைக்குகளை ஓரமாக எடுத்து விடும்படி கூறியுள்ளார். அப்போது, பழனிமுத்து, வசந்தகுமார் ஆகியோர் கனகராஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாய் தகராறு முற்றவும், இருவரும் சேர்ந்து கனகராஜை கடுமையாக தாக்கி மார்பில் கத்தியால் குத்தினர்.

ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழவும், அவரது உறவினரான சுரேஷ் வந்துள்ளார். அவரது முகத்திலும் கத்தியால் குத்தி கிளித்துள்ளனர். இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பினர். படுகாயமடைந்த கனகராஜ், சுரேஷ் ஆகியோரை மீட்ட உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அழகாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர் தேடுதல் வேட்டையில் கல்லூரி மாணவர் கனகராஜ் உள்ளிட்ட இருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற பழனிமுத்து (55), வசந்தகுமார் (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்