SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் வீரர்களுக்கு கல்வி உதவித்தொகை

6/19/2017 11:07:51 AM

சேலம்: சேலம் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் சம்பத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான கல்வி உதவித்தொகை நடப்பாண்டு வழங்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயின்று வருபவர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம்.

தகுதி வாய்ந்தவர்கள், www.ksb.gov.in என்ற இணையதளத்தில் தங்களது படைவிலகல் சான்று, அடையாள அட்டை, பள்ளி, கல்லூரியிலிருந்து பெறப்பட்ட சான்று, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மற்றும் வேறு எந்த நிறுவனத்தின் மூலமும் நிதியுதவி  பெறவில்லை என்பதற்கான உறுதி மொழிச் சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 1ம் முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிற்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள்ளும், 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு அக்டோபர் 25ம் தேதிக்குள்ளும், இளங்கலை பட்டப்படிப்பிற்கு நவம்பர் 25ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்