SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லட்சுமணசமுத்திரம் ஏரியில் மண் அள்ளி சூளைகளுக்கு முறைகேடாக விற்பனை

6/19/2017 11:07:03 AM

ஆத்தூர்:  ஆத்தூர் அருகே லட்சுமணசமுத்திரம் ஏரியில் மண் வெட்டி எடுக்கப்பட்டு, லாரிகளில் செங்கல் சூளைகளுக்கு முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது. இதை வருவாய்துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆத்தூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை, தூர்வாரி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஏரிகளில் அள்ளப்படும் மண், செங்கல் சூளைகள் மற்றும் தனியார் சிலருக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து செல்லியம்பாளையம், லட்சுமணசமுத்திரம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: லட்சுமணசமுத்திரம் ஏரியில், கடந்த சில வாரமாக விவசாயிகள் மண் அள்ளிக் கொள்ள வருவாய்த்துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால், தனியார் சிலர் தங்களின் சொந்த செல்வாக்கை பயன்படுத்தி, லாரிகளில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கும், தனியாருக்கும், ஒரு லோடு ₹2500 வரை விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாய தேவைக்கு மண் அள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்கின்றனர். தினமும் 200 லோடு அளவுக்கு, லாரிகளில் மண் வெட்டி எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SmokingVolcano

    புகையை கக்கும் எரிமலை : ரம்மியமான காட்சிகள்

  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X