SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைரோடு அருகே போலீசாரின் நடவடிக்கையால் பொதுமக்களின் மறியல் தவிர்ப்பு

6/19/2017 10:51:50 AM

செம்பட்டி : கொடைரோடு அருகே போலீசாரின் நடவடிக்கையால் பொதுமக்கள் தாங்க நடத்தவிருந்த சாலைமறியலைக் கைவிட்டனர்.
சிறுமலை அடிவாரப் பகுதியில் உள்ள கிராமம் ராமராபுரம். இப்பகுதியில் உள்ள தனியார் கட்டடத்திற்கு, உயர்மின் பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சில மாதங்களாக நடந்து வருகின்றன. குடியிருப்புப் பகுதி வழியே, மின்பாதை அமைக்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் ரிவித்து வந்தனர். இதனால், மின்பாதை பணியில் தாமதம் நீடித்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மின்வாரியத்தினர் மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த மக்கள், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் மறியல் செய்வதற்காக புறப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அம்மையநாயக்கனூர் போலீசார், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். குடியிருப்புப் பகுதியைத் தவிர்த்து, சாலையோரத்தில் மின்பாதை அமைக்க ஏற்பாடு செய்வததாக தெரித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்