SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிரியர்களுக்கும் இலவச பாட புத்தகம் வழங்க கோரிக்கை

6/19/2017 10:51:42 AM

பழநி : பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் இலவசப் புத்தகம் வழங்க வேண்டுமென ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஆயக்குடி இலவச பயிற்சி மையம் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு கல்வித்துறைக்கு ஏராளமான நிதிகளை ஒதுக்குகிறது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகம், இலவச சீருடை, இலவச உணவு மற்றும் காலணி போன்றவற்றை வழங்கி வருகிறது. இதனால், மாணவர்கள் பெரிதும் பயன்  பெறுகின்றனர். ஆனால், பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு செட் புத்தகம் கூட வழங்குவதில்லை. ஆசிரியர்கள் மாணவர்களிடம் உள்ள புத்தகத்தை வாங்கியே பாடம் நடத்துகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பள்ளிகளுக்கு இலவசப் புத்தகம் வழங்குவதுபோல், பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் இலவச புத்தகம் வழங்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • JustinTrutto

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் இந்தியா வருகை

  • 19-02-2018

    19-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்