SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரும்... ஆனால் வராது ! ‘ஆட்டம்’ காட்டும் அரசு பஸ்

6/19/2017 10:37:52 AM

நாகமலை : மாவிலிபட்டி கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால்  பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை செக்கானூரணி அருகே மாவிலிபட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் செக்கானூரணி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் சென்று படிக்கின்றனர். வேலைக்காக பொதுமக்கள் வெளியூர் சென்று வருகின்றனர்.

இதற்காக பஸ் நிலையத்தில் இருந்து திருமங்கலம் வழியாக மாவிலிபட்டி கிராமத்திற்கு காலை 6.30 மணி, 10மணி, 3.30 மணி உட்பட 3 நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திடீரென ஒரு நேரம் மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. இதே போல பெரியார்பஸ் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம், சாக்கிலிபட்டி, தென்பழஞ்சி, மாவிலிபட்டி வழியாக செக்கானூரணி வரை காலை 10மணி, 1மணி, 3மணி  என 3தடவை வந்த பஸ்கள் தற்போது சரியான நேரத்திற்கு வருவது இல்லை.

இதனால் மாணவர்கள் உரிய நேரத்திற்கு பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வேலைக்கு செல்லும் பொதுமக்களும் கடுமையான அவதி படுகின்றனர்.  போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவிலிபட்டி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • JustinTrutto

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குடும்பத்தினருடன் இந்தியா வருகை

  • 19-02-2018

    19-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்